அலை மோதுதே, அரிசோனா ஸ்ரீ மஹா கணபதி
ஆலயத்தில், பக்த ஜனங்களின் அலை மோதுதே !
மே 8,9, 10 தேதிகளில் நடக்கவிருக்கும், "ஸ்ரீ ராமர் பரிவார"
கும்பாபிஷேக திரு விழாவில். கலந்து கொண்டு அவன்
அருள் பெற, வரும் பக்த கோடிகளுக்கு, அன்பு நிறைந்த
வரவேற்ப்பு கார்த்திருக்கின்றது !.
ஸ்ரீ ராமர் பரிவாரத்தைப் பற்றி ஒரு சிறு நோட்டம்!
ஸ்ரீ ராமரின் மஹிமை!
" பரித்ராணாய சாதூனாம் , விநாசாய ச துஷ்க்ருதாம் .
தர்ம ஸம்தபனார்தாய . ஸம்பயாமி யுகே, யுகே " என்று
க்ருஷ்ண பகவான் ஸ்ரீபகவத் கீதையில் சொன்னார்".
"சாதுக்களை காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலை நாட்ட யுகம்தோறும் அவதரிப்பேன்"
என்று க்ருஷ்ண பகவான் ஸ்ரீபகவத் கீதையில் சொன்னார்".
அது போலவே,ராவணன் சிறந்த சிவ பக்தனாக இருந்தாலும், தகாத
செய்கைகளில் ஈடுபட்டு,சாதுக்களை கொடுமை படுத்தியதால்
ராவணை அழிக்க,தசரத சக்ரவர்த்தியி,மகனாக ஸ்ரீ ராமர் அவதரித்தார்!
ரமாய, ராம பத்ராய, ராமசந்ராய ,வேதசே,
ரகுநாதாய, நாதாய, சீதைய பதயே நமஹ! என்று அன்புடன்
விச்வாமித்ரரும், தசரதரும் , அயோத்யா குடி மக்களும் ,
அதுபோல மிதிலையில் குடி மக்களும் , ஸ்ரீ ராமரை அன்புடன்
அழைத்த பெயர்கள்தான் இவை!
தந்தை, கைகேயிக்கு கொடுத்த வாக்கை காப்ற்றவே
சுய நலன் கருதாது, உடனநடியாய் "பிதிர் வாக்ய பிரிபாலனம்" செய்ய
14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்ற உத்தம பு த்திரன் இவர் அல்லவோ?
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி மகான், அவரே இயற்றிய கவிதையில்.
பொது மக்கள் சகல சுகங்களைப் பெற நித்ய பாராயணமாக
இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார் !
"ராம ராம ராம ராம, ராம ராம ராம்.
ராம ராம சீதா` ராம ராம ராம ராம்."
,
ஸ்ரீ சீதா தேவியின் ஸ்வயவரத்திர்க்கு சென்ற ராமன் மிதிலை வீதியில் நடந்துசெல்லும்
பொழுது, "அண்ணல் அவளைக் கண்டான் , அவளும் கண்டாள்"என்கிரார் கவி..
"கண்டதும் காதல். கோண்டதே கோலமோ? "புஜபல பராக்ராம ஸ்ரீ ராமன் வில்லை
முறித்து சீதையை மணந்தது நாம் அறிவோம்.
ஸ்ரீ சீதா பிராட்டியாரின் மஹிமை !
பதிவ்ருதா சிரோண்மணி ஸ்ரீ சீதா பிராட்டியார், ஸ்ரீ ராமனுடன் மன்றாடி
தானும் காட்டுக்குச் சென்ற உத்தமி அன்றோ ! "பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை
உண்டானால், எத்தாலும் கூடி வாழலாம்" என்ற குரளை நிருபித்தனள் அல்லவோ?
ஸ்ரீ ராமரின் ஆருயிர் நண்பன் - வாயு புத்திரன் ஸ்ரீ ஹனுமான் மஹிமை !
உலகம் புகழும் ஸ்ரீ ராம பக்தன் ஆஞ்சநேயன்!, எவ்வேளையிலும் நினைப்பதும்
காண்பதும்,, எண்ணுவதும் ராமனனைத்தான்! நினைக்க முடியாத அளவுக்கு பல
அசாத்ய சாதனைகளை புரிந்தவர்!! அப்படி என்ன செய்தார்?
.1. ஸ்ரீ ராமன் சகோதரன் லக்ஷ்மணன், யுத்தத்தில் அஸ்த்திரத்தினால்அடிபட்டு மூர்ச்சித்து
கிடந்த பொழுது, அவர் உயிரை காப்பாற்ற சஞ்சீவி மலையையே பெயர்த்து சுமந்து வந்து
லக்ஷ்மணன் உயிரைக் காபாற்றினார் ! 2. ராவணன் ஆண்ட இலங்கையையில் தீயை வைத்து அழித்தார்!
ஒரு கவி இதை அழகாக வர்ணிக்கிறார்.
"அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான். அவன் எம்மை அளித்துக் காப்பான்"
இதன் பொருள் -
"அஞ்சிலே ஒன்று பெற்றான்" -பஞ்ச பூதங்களாகிய பூமி,, நீர், அக்னி, வாயு, ஆகாசம்
என்பதில், வாயுவின் புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமான்! "அஞ்சிலே ஒன்றைத் தாவி" -
விரி கடல் நீரைத் தாண்டி , "அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி -
, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு" ' - ஐந்திலே ஒன்றாகிய பூமி
பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு,
அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் - இலங்கையில், பஞ்ச பூதங்களில்
ஒன்றாகிய தீயை வைத்தான் ! அவன் எம்மை அளித்துக் காப்பான்". அந்த வீர
" பஜரங்பலி நம்மைக் காப்பான் " என்பதுதான் இதன் பொருள்!
3.. அதி பராக்கிரம செயல்! மயங்கி கிடந்த ஸ்ரீ ராம,லக்ஷ்மணரை காப்பாற்றினார் !
ஸ்ரீ பஞ்சமுக பஞ்சமுக ஆஞ்சநேயர் உதயம்!!
ராவணன் தம்பி அதிர்ராவணன், தன் மாயா சக்திகள் பலவற்றை உபயோகித்து,
ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களை மூர்ச்சிக்க வைத்து, பாதாள லோகத்துக்கு கொண்டு சென்றான்.
இதை அறிந்த ஸ்ரீ ஹனுமான், அதிர் ராவணனனைக் கொன்றால்தான். இவர்களை
காபாற்ற முடியும் என்பதை உணைந்தார். ஆனால்,அவனைக் கொல்வதும் சுலபம் இல்லை.
ஏனெனில், அவன் உயிர், பல திசைகளில் உள்ள ஐந்து தீபங்களில் இருப்பதையும் ,
அந்த எரியும் தீபங்க்களை ஒரே சமயத்தில் அணைத்தால்தான் அவன் உயிர் போகும்
என்பதை உணைந்து, தானே பஞ்சமுக ஆஞ்சநேயராக உரு எடுத்து, அந்த ஐந்து தீபங்களையும்
ஒரே மூச்சில் அணைத்து அதிர் ராவணனை கொன்று, ஸ்ரீ ராம லக்ஷ்மணரை
காப்பாற்றியதாக வரலாறு..
இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ராமர் பரிவாரத்தை நினைப்பதும் நன்று,, காண்பதும்,
, அவர் சரித்திரம் கேட்பதும், நாம ஸ்மரணம் செய்வதும், மிகவும் நன்று! அவர்களுக்கு சேவை
செய்வது மிக மிகவும் நன்று! கும்பாபிஷேகத்திதில் பங்கெடுத்து சேவை செய்வது போல வேறு
கைங்கர்யம் எதுவும் உண்டோ? இதுவே தருணம் வாரீர், சேவை செய்ய, குடும்பத்துடன்!
தொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா
,