Sita Rama Kalyanam- A devotee contributed article

" சீதா கல்யாணம் வைபோகமே"

 

  ஆதித்யன் ஆட்சி  புரியும் அரிசோனாவில்  மஹா சக்தி  வாய்ந்த ஸ்ரீ  மஹா கணபதி ஆலயத்தில்,

  2015, மே 10ம தேதி , பகல் 2 மணிக்கு கல்யாணம் நடக்க இருக்கிறது!   யாருக்கு?

 

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமா அவதாரத்தில். ஸ்ரீ ராமர்  தன் தர்ம பத்னி 

 ஸ்ரீ மஹா லக்ஷ்மியை, தேவி சீதா  பிராட்டியாராகக் கொண்டு  திருமணம் செய்து கொள்வதே  

 சீதா கல்யாணம்.   " சீதா கல்யாணம் வைபோகமே" 

 

ஸ்ரீ சீதா  கல்யாணம்! அதை நீங்களே  நடத்தி வைக்க தவறாதீர்கள் ! அரிய சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள்!

ஏன்  என்றால்.. கிழே கண்ட பாட்டையும், விளக்கத்தையும் புரிந்துகொள்ளுங்கள்.,.

                            

                           அரர்க்கு  அன்பு புரிகுவதேன் ?

                           நரரக்கு முறை ஆகுவதேன்?

                           திருப் பணிகள் செய்குவதென்?

                           பெருத்த புண்ணியம் ஈதே !

 

இங்கு ஒரு முக்கியமான  பெரிய ரகஸ்யத்தை . ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் சொல்லுகிறார்.

    

அரர்க்கு  அன்பு புரிகுவதேன் ?  விளக்கம்.              

 

'பரோபகாரம் பண்ணி மனஸ் பக்குவமானால்தான் நிஜ பக்தி வரும். ஈஸ்வராநுக்ரஹமும் வரும்.

அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது,

 ப்ராணி வதையைத் தடுப்பது பசு வளர்ப்பது, பசிக்கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது

என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல்,

கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்."  

 

மேலும்,, இலவச உபநயனம் செய்வித்தாலோ , ஏழைக/குக்கு திருமணம் செய்வித்தாலோ   அல்லது

 உதவி புரிந்தாலோ , இலவச கல்விக்கு உதவினாலோ , கோவில்கள் கட்டினாலோ அல்லது

நிர்வாகம் செய்தாலோ, கோவில்களில்  பழுது பார்த்து புதிப்பித்தாலோ, இவைகள் மஹா

 புண்ணிய கார்யங்க்கள்.அவர்களுக்கு ஆண்டவன், இம்மையிலும் மறுமையிலும், இக பர சுகம் தந்து,

ஏழு தலைமுறை செழிப்பாக இருக்க உதவுவார்!  

 

மனிதர்களுக்கே  கல்யாணம் நடத்திவைப்பது   ஒரு மஹா  புண்ணிய கார்யமென்றால்,

தெய்வத்தின்  கல்யாணம் செய்து வைப்பது  எவ்வளவு புண்யம்!

 

கல்யாணமான  ஒவ்வொருவரும் தன்  வாழ்க்கையை எப்படி நடத்தவேண்டும் என்பதை ,

உணர்த்துவதுதான்,ஸ்ரீ ராமரின் 14 ஆண்டு கால வனவாசம், ஒரு எடுத்துக் காட்டு!

மேலும், ஸ்ரீ சீதா தேவி கற்ப்பித்த பாடம் - தாம்பத்திய வாழ்க்கையில்,

"பர்த்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால், எத்தாலும் கூடி வாழலாம்", என்பதை நிரூபித்தாள்!

 

எவ்வித  கஷ்ட நிலையிலும் , நீதி நெறி தவறாது, அமைதியாவும் ,தீரமாகவும்

இடம், பொருள், ஏவல்க்கேற்ப சமயோஜிதமாய் , நடந்த உத்தமன் ராமன் அல்லவோ?

 மற்றொரு பெரிய குணம்! அவர் தர்ம போர் வீரன்! என்ன ஐயா! போரில், போர் வீரனுக்கு 

 கொல்லுவது அல்லவோ தர்மம்? ஆம். ராம ராவண யுத்தத்தில், ராவணன்

 நிரபராதியாக நின்ற காலத்தில், ஒரே  அம்பினால்  அவனைக் கொன்றிருக்கலாம்.

 கொல்லவில்லை.. "இன்று போய், நாளை வா", என்றார். இவரல்லவோ தர்ம போர் வீரன்? நிற்க .

 

 ஸ்ரீ ராமன் மிதிலை வருகை!-

சீதாவின் ஸ்வயம்வரத்திர்க்கு ஸ்ரீ ராமனும், மற்றும்  பல மன்னர்களும்  வந்திருந்தனர் .

நிபந்தனை - 

 கனமான அந்த பழைய வில்லை யார் முறிக்கிரார்களோ, அவரே சீதையை மணப்பார்.என்று.

 

அவன் ஆழகு - மிதிலை ,மாட வீதியில் ஸ்ரீ ராமன் , அழகே உருவாய், அடக்கமே உருவாய் நடந்து .

சென்றதை  கண்டவர், அவர்  அழகில் லயித்து  நின்றனர்.. இதை கவி கம்பர்  கம்ப ராமாயணத்தில் 

அழகாக சொல்கிரார் !

 

" தோள்கண்டார் தோளே கண்டார்  

தொடுகழல் கமலம் அன்ன  

தாள்கண்டார் தாளே கண்டார்......." எந்த அங்கத்தை கண்டனரோ, அதிலேயே லயித்து,  யாரும்

 ஸ்ரீ ராமனை முழுக்க கண்டதில்லை, என்கிரார் .

 

சீதையும், ஸ்ரீராமனைக் காண  வந்திருந்தாள். இதைக் கம்பன்," அண்ணலும் கண்டார்.அவளும் கண்டாள்"

 என்கிறார். அப் பழைய , பெரிய வில்லை புஜ  பல பராக்ரமம் பொருந்திய ராமன்,  எளிதில்   முறித்து.

ஸ்ரீ  சீதையை விவாஹம் செய்து கொண்டனர் 

 

"சீதா கல்யாணம் வைபோகமே"  

 

 ஸ்ரீ சீதா ராம கல்யாணம் நடத்தி வைத்து மஹா புண்ணியம் தேட,

குடும்பத்துடன் வாருங்கள் ! 

  

தொகுத்தவர்  - ஹரஹர சுப்பையா