Thai Poosam- A Devotee Contributed Article

"தை பூசம்" மஹிமை !

 

  சக்தி மிகு  ஸ்ரீ மஹா கணபதி கோவில், அரிசோனாவில் !  

 

       வேலுண்டு, வினை இல்லை   !

       மயில் உண்டு, பயம் இல்லை  !

                                    குகன் உண்டு, குறை இல்லை  !         ஒரு  பக்தன் 

 

தாரகாசுரனை  அழிக்க. பார்வதி அன்னை பராசக்தி ,

மகன் அழகன் முருகனுக்கு,  "சக்தி வேல்"அளித்த 

"தை பூச", தினத்து  கொண்டாட்டமாம்!, கொண்டாட்டம் !

அச்சக்தி வேலையும் முருகனையும் காண

பக்த கோடிகளே ! திரண்டு வாருங்கள்! 

திருத்தணியோ, திருப்பரங்குன்றமோ ஏற வேண்டாம்!

அத்திருக் கல்யாண கோலத்தை  அரிசோனாவிலேயே காணலாம்! 

திருச்சரவணப்  பொய்கைக் காணவும் போகவேண்டாம்! 

க்ஷடாக்ஷரத்தின் மகிமையை இங்கும் அறியலாம்!!

 

" ஓம் சரவண பவ " என்ற திருமந்திரத்தை  ஒரு முறை சொன்னாலே

போதுமாம்!கோடி தீர்த்தங்களில் செய்த ஸ்நானத்தின்  புண்யமாம்!

 க்ஷடாக்ஷரத்துள்   எல்லா மந்திரங்களும் அடக்கமாம்!

வாருங்கள் ! நம் குடும்ப நலனுக்காக ஒன்று சேர்ந்து, 

  " ஓம் சரவண பவ " என்று பல முறை கூறுவோம் !

 

குறை தீர்ந்தவர்கள்,  பால் குடமோ,வண்ணக் காவடியோ எடுத்தாடலாம்!

குறை உள்ளவர்களும் குறை தீர, கூடவே சேர்ந்து  எடுக்கலாம்!  

 

தீராத வினைகளை தீர்த்து வைக்கும் எம் அப்பனே ! முருகா !

 ஆறு படைவீடு அரசா ! மூவுலகெங்கும் புகழும் சங்கரன் புதல்வா!

பரமேஸ்வரனுக்கு ப்ரணவத்தின் பொருளை  ஓதிய ஸ்வாமிநாதா !

அவ்வை மா ஞானிக்கு சுட்ட பழத்தின் தத்துவத்ததை  உணர்த்திய பாலா !

எமக்கும் ஞானத்தை அருளுவாயப்பா! முருகா!

அடைக்கலம் அடைந்தோம் அய்யனே! உன்  திருவடி சரணம்!

 

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பர். உள்ளம் உருக, ஞான

 குருவை துதித்து,  ஆடிப் பாடினால் ஞானமும் பிறக்கும் !

எல்லாவித பாக்கியங்களும் கிட்டும் !

 

முருகா, அழகா, வெற்றிவேல் முருகா!

வேகமாய் வந்தமை  காத்தருள் கந்தா!

 

துதிப்போம், குடும்பத்துடன் வாரீர் வாரீர்!. 

சக்தி மிகு  ஸ்ரீ மஹா கணபதி கோவில், அரிசோனாவில் ! 

 

 

தொகுத்தவர் ஹரிஹர சுப்பையா