ஓம் நமஹ: சிவாய !
ம்ருத்துன்ஞ்ஜயாய ருத்ராய,
நீலகண்டாய ஷம்பவே
அம்ருத்தேஷாய ஸர்வாய
மகாதேவாய தே நமஹ: !
" சம்போ மகாதேவா, ஹர ஹர சம்போ மகாதேவா ! " என்று பக்த
கோடிகள் கரகோஷம்! பல திரிகளைக் கொண்ட தீபத்தின் ஒளியில்
'அதி சுந்தரமான ‘ எம் பெருமானின் திவ்ய தரிசனத்தைக் கண்டு
களித்த கரகோஷம்!
ஸ்ரீ மகா கணபதி கோவில அரிசோனாவில், மகா சிவராத்ரி அனுபவம்
மறக்க முடியாதது !
ஸ்ரீ மகா கணபதி கோவில் , அரிசோனாவில் பிப்ரவரி 16ம் தேதியன்று,
"மஹா சிவராத்திரி" வைபவம் மிக விமரிசைய்டாக நடக்க இருக்கிறது.
தாங்கள், குடும்பத்துடன் வந்து, எம்பெருமான். பாதி மதி வேணியனை,
கருணா மூர்த்தியை தரிசித்து, எல்லாவிதபாக்கியங்களையும் பெற்று
இவ்வுலகிலும், மறு உலகிலிலும் சுகங்களை அனுபவிக்க,அவன்
அருளைபெற வேண்டாமா ? இது அல்லவோ தருணம் !
கீழ்கண்ட ப்ரபல சிவ ஸ்தலங்களில்
மகா சிவராத்திரி விமரிசையாக கொண்டாவது போல் , நம்
அரிசோனா ஸ்தலத்திலும் மிகப் பிரமாதமாக கொண்டாடுவோம்!
1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் சோமநாதர்
2. ஆந்திரபிரதேசத்தின் ச்ரிசைலம் மல்லிகார்ஜுனர்
3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்
4. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்.
5. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்
6. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்
7.. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேது பந்தனம் இராமேசர்
8. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்
9. மஹாராஷ்ட்ர கௌதமீ கரையில் நாசிக் திரயம்பகேசர்
10. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்
11. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்
12.. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேது பந்தனம் இராமேசர்
13. மத்தியபிரதேசசிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்
சிவ பெருமான் கண்ணப்பனுக்கு ஏன் அருளினார்? எச்சிலை துப்பினதனல்தானா?
இல்லை, செருப்புக்காலால் கண்ணில் வந்த இரத்தத்தை அழுத்தி
மிதிததாலானா? பக்திகள் பல விதம். அதிலே இதுவும் ஒரு விதம்!
அறிந்தும் அறியாமலும் செய்த பக்தி!
இதே மாதிரிதான் சிவராத்ரி இரவில் நடந்த ஒரு வேடனின் சம்பவமும்!
கொடும் மிருகங்கள் உலவும் ஒரு காட்டில், வாரணாசியில் பிறந்த ஒரு
வேடன் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான், ஒரு நாள் பசியால் வாடும் தன் குடும்பினத்தினருக்கு வேட்டையாடி உணவு கொண்டுவரச் சென்றான்.
வெகு நேரம் வேட்டையாடியும், ஒன்றும் கிடைக்கவில்லை. களைத்து
பசியுடன் இருந்த அந்திப் பொழுதில் ஒரு மான் தென்பட்டது
உடனேயே அதனைக் கொன்று,கால்களை கட்டி தூக்கிச் சென்றான்.
இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போக யத்தனித்தால் கொடிய மிருகங்கள்
கட்டாயம் தாக்கும். போக முடியாது . என்ன செய்வது? அருக்கிலிருந்த
( பில்வ) மரத்தின் மீது ஏறி, ஒரு கிளையில் படுத்துக்கொண்டான்.
பசி, களைப்பு, கவலையால் வாடினான் . தூக்கம் தாங்கவில்லை.
தூக்கத்தில் கீழே விழுந்தால், மிருகங்கள் பாய்ந்து கொன்றுவிடும்.
அதனால், விழித்துக்கொண்டிருப்பதர்க்காக, அம்மரத்து இலைகளை
ஒன்று ஒன்றாக இரவு முழுதும் கீழே போட்டான். (அர்ச்சனை) குடும்பினத்தினர்
பசியால் தவிக்கின்றனரே என்று இரவு முழுதும் கண்ணீர் விட்டான்.
அதுவும் கீழே இருந்த .சிவலிங்கத்தின் மீது விழுந்தது.(அபிஷேகம்)
இரவில் போட்ட அந்த எல்லா பில்வ இலைகளும் கீழே இருந்த
சிவலிங்கத்தின் மீது விழுந்தது. காலையில் அதைப் பார்த்தான்.
அதுதான் அவன் கண்ட ஜோதிரூப சிவ லிங்க மூர்த்தி ! முக்தி !
அவ்வேடனுக்கு அளித்தார் எம் பெருமான் முக்தி!
அறிந்தும் அறியாமலும்,தெரிந்தும், தெரியாமலும் செய்த பக்தி!
,.
இக்கதையின் ஆன்மீக அர்த்தத்தை ஸ்வாமி சிவானந்த ஸ்வாமிகள்
மிக அழகாக வர்ணிக்கிறார்.
காடு - விழிப்பு, ஸ்வப்பனம் , நித்திரை, துரியாஎன்ற நான்கு நிலைகளைக் கொண்ட மனம் -
கொடிய மிருகங்கள் - காமம், குரோதம், வெறுப்பு,கோபம், பொறாமை,
பேராசை என்ற கட்டுக்கு அடங்காது அலையும் கொடிய மிருகங்கள் -
வேடன் - ஒரு யோகி - கொடிய மிருகங்கள், கொல்லப்படவேண்டும் –
ஆஞ்யா சக்கரத்தில், யோகி தன் த்யானத்தை நிறுத்தி அவைகளை அடக்க முயல்கிறான்.
பில்வ மரம்தான் - முதுகு எலும்பு.
பில்வ மரம் அடிதான் - மூலாதாரம்,
ஏறி கிளையில் படுத்தான்.- மூலாதாரத்திலிருந்து "குண்டலனி சக்தி"
முதுகேலும்புனுள் இருக்கும் மூன்று நாடிகளின் நடுவில் இருக்கும்
சூஷ்ம நாடி வழியாக "ஆக்ஞ்யா" சக்ரத்தை அடைகிறது.
பில்வ இலைகள்தான் - 3 நாடிகள் - இட, சூஷ்ம, பிங்கள நாடிகள் !
உறக்கம் வராமலிருப்பதற்க்காக போட்ட பில்வ இலைகள்தான் "அர்ச்சனை"
குடும்பித்தினர் பசியால் வாடுகிறார்களே என்று அழுத கண்ணீர்தான் "அபிஷேகம் "
அதிகாலையில் கண் முழித்து கீழே பார்த்தான். பில்வத்துடன் சிவ லிங்கம்
. ஜோதியாய் காட்சி அளித்ததுதான் முக்தி ! எம்பெருமான் அளித்தார் முக்தி !
ஒரு சமயம்., அன்னை பராசக்தி பார்வதி தேவி, சிவ பெருமானிடம்
" ஸ்வாமீ ! மக்கள் உம்மை பலவிதமாக பூஜிக்கின்றனர். அவைகளுள் உமக்கு பிடித்த பூஜை எது?" என்று வினவினாள் . அதற்க்கு, அவர் ":தேவி, சிவராத்ரியில் நாள் முழு தும் பட்டினி இருந்து, இரவு நான்கு ஜாமங்களில், முதல் ஜாமம் நீராலும், இரண்டாவது ஜாமம் பாலினாலும்., மூன்றாம் ஜாமம் தயிரினாலும், நான்காம் ஜாமம் , நெய் இவைகளால் அபிஷேகித்து, காலையில் பிராமருக்கு போஜனம் செய்வித்த பிறகு , தான் உண்டால்,
அதுவே எனக்கு மிகவும் பிடித்தது" என்றார்.
சிலர் தீவிரமாக சுத்தப் பட்டினியாக இருந்து கடைப் பிடிக்கிரார்கள். பலர்.நாள் பூராவும்
"ஓம் நமஹ: சிவாய" என்று ஜபித்துக் கொண்டே இருப்பார்கள்.
எதுவும் முடியாதவர்கள் " சிவனே" என்று அபிஷேக அர்ச்சனைகளை பார்த்தாலே போதும். கிடைக்கும் முக்தி !
வாருங்கள்.! சந்தர்பத்தை கை விடாதீர்கள்! உங்கள் வரவை
எதிர்கொண்டு அழைக்க காத்திருக்கின்றனர் !
வருக! குடும்பத்துடன் வருக !
தொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா