"விநாயக சதுர்த்தி "- 2015
பக்த கோடிகளே ! வாரீர்!
ஸ்ரீ மஹா கணபதியை, விக்ன, சக்தி, சித்தி விநாயகரை எதிர் கொண்டு அழைக்க, வாரீர்!
குழந்தை உள்ளம் கொண்ட பாலனை, உண்மையே உருவான உத்தமனை, அன்னையின்
ஆணையைக் காக்க வேண்டி,போருக்கு வந்த தந்தையின் போர் வீரர்களையே முறியடித்த,
சக்தியின் வீர மகனை வரவேற்ப்போம்! வாரீர்!
கோயில் வேத பண்டிதர்களும், நிர்வாக ஆற்றலும், ஆர்வமும் நிறைந்த நிர்வாகிகளும்,
பக்த கோடிகளும் புடைசூழ, வரவேற்ப்போம், வாரீர்!
அரிசோனா ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில், செப்டம்பர் 16, 2015 முதலாகத் தொடங்கி,
26 தேதி வரை, நீங்கள் ஆவலுடன் காத்திருந்த ,பக்தியுடன் பூஜித்த, சக்தி ,சித்தி
"விநாயக சதுர்த்தி" ப்ரும்மோத்ஸவம் " 10 நாட்கள் பிரமாதமாக கொண்டாடப்படும்!
எந்தக் காரியத்தை தொடங்கும் பொழுதும், பிரபு விநாயகரை துதித்து இடையூறுகள்
ஏதும் வராமல், வெற்றியடைய வேண்டுவது நம் நாட்டு புராதன வழக்கம்!
அவரை அநு தினமும், பூஜித்து, வாழ்க்கையில் முன்னேறுவதும் நம் நாட்டின் சிறப்பு அம்சம் !
விநாயகரரின் அங்கங்களின் மஹிமை! -
பெரிய தலை - புத்திசாலித்தனம்-- ஞானம்
விஷயங்களை உடனேயே அறிதல், நல்லது, கெ ட்டது எது என்று அறியும் ஞானம்.,
(இவை வாழ்க்கையில் முன்னேற முக்ய அம்சங்கள்!) இதையே,ஆதி சங்கரர், அன்னபூர்ணா
ஸ்தோத்திரத்தில் "ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதி" என்று பரா சக்தியை
வேண்டுகிறார்!
தும்பிக்கை - கரடு முரடான வாழ்க்கை பாதையை சமாளிக்கும் தன்மையும், மிகவும்
சூஷ்மமான மானசீக உள் நுட்பங்களை அறியும் சக்தியும் பெற்றது!
காது - மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்டு உணரும் தன்மை! *- கேள்வி (ஞானம்)
இரண்டு தந்தங்கள் - ஞானம் (வலது தந்தம), உணர்ச்சி (இடது தந்தம் ) - என மனிதனின் தோற்றம்.!
முறித்த இடது தந்தம் - முற்றுமை அடைய வேண்டி,ஞானத்தால் உணர்ச்சியை வெல்லுதல்!
விநாயகரின் பெருமை (1)
பரம பக்தர் ஸ்ரீ முத்துச்வாமி தீக்ஷதர் ஸ்ரீ விநாயகர் மீது இயற்றிய 17 க்ருதிகளில் "விநாயக சதுர்த்தி"
க்காகவே ராகம் ஷண்முகப்ப்ரியாவில் இயற்றிய "சித்தி விநாயகம்"தான் நீர் பூஜிக்கப் போகிறீர்!
2) தம்பி முருகனுடன் மாம்பழப் போட்டி - நீதி
ஸ்ரீ நாரத மஹா முனிவர் சிவபெருமானுக்கு அளித்த மாம்பழக் கனியை அடைய,.
முருகப் பெருமானுக்கும் விநாயகரருக்கும் ஒரு போட்டி! யார் உலகத்தை மூன்றுமுறை சுற்றி வருகின்றாரோ அவருக்குதான் அந்த பழம்! முருகன் தன் அண்ணனால் முடியாது
என்று உணர்ந்து, உடனேயே தன் மயில் வாகனமீதேறிச் சென்றார். விநாயகர் அந்த
தேகத்துடன் போக முடியாத நிலை! "மதியால் விதியை வெல்லலாம்!" சற்று யோசித்து,
விநாயகர் தன்னை சிருஷ்ட்த்து, காத்து ,கெட்ட போக்குகளை அழித்து, ஆளாக்கிய
பெற்றோர்கள் தானே அவர்’ உலகம்! உடனே, மூன்று முறை பெற்றோர்களை வலம் வந்து,
நமஸ்கரித்து, அக் கனியை கேட்டா ர்!
தத்துவத்தை புரிந்து கொண்ட சிவ பெருமான் அக் கனியை பரிசாகக் அளித்தார்.!
(புத்திசாலிதனத்தின் சிகரம்!) இதன் நீதி என்னவென்றால், பெற்றோர்களே உம் உலகம்!
உம் தெய்வம்!அவர்களை மிஞ்சி, இவ்வுலகில் வேறு எவரும் பெரியவன் இல்லை! இதை
வட மொழியில்,"மாத்ரு தேவோ பவ" என்றும், "பித்ரு தேவோ பவ" என்றும், இதையே
தமிழில் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் "என்று சான்றோர் வாக்கு!. உள் கருத்து -
உம்னை தன் உயிருக்கு உயிராக எடுத்து வளத்த பெற்றோர்களை, கடைசீ காலம்வரை,
சந்தோஷமாக பாதுகாப்பதே உம் கடமை !
3) விநாயகரின் பெருமை - கேள்வி ஞானம்!- வாழ்க்கையில் முக்கியமான அம்சம்!
விஷ்ணு அம்சமான ஸ்ரீ வியாசர் வேகமாக சொல்ல, காது கொடுத்து கேட்டு, புரிந்து கொண்டு ,
உடைத்த தந்தத்தினால், எழுதிய இதிகாசம்தான் "மஹா பாரதம்" !
அவர்கள் இருவரும் உலகோர்க்கு அளித்த "வாழ்க்கை வழி காட்டி" ! நீதி -
எந்த காரியமும் செய்ய ஆணையை எடுக்கும் பொழுது அவ் ஆணையை நன்றாக
காது கொடுத்துக் கேட்டு, புரிந்து கொண்டு செயல்படுவதே புத்திசாலித்தனம்!
விநாயகரின் பெருமை (4) - வீரம்!
அருணகிரி நாதர் திருப் புகழில், "அப்புரம் எரிசெய்த அச்சிவனுரை ரதம்,
அச்சது பொடி செய்த அதி தீரா" என்று பாராட்டுகிரார்!
கடந்த ஐந்து ஆண்டுகளாக களி மண்ணால் பிள்ளையார் செய்த சிறு பாலகர்களுக்கு
ஸ்ரீ சித்தி விநாயகர் அளித்த பரிசு!
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் களிமண் பிள்ளையார் செய்ததை கண்டு நீங்கள்
எவ்வளவு சந்தோஷம் அடைந்தீர்கள்?! உங்களைவிட பன்மடங்கு அக் குழந்தையின்
முகத்தில் கண்டஆனந்தத்தை கண்டு ரசித்த பேர்கள்தான் எத்தனை! இதைகண்டு ரசித்த
"ஆனந்த விநாயகர்" அவர்கள் தம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேண்டிய
ஆற்றல்களை அளித்தார்! அவை -
1.-பயமின்றி தைரியமாக போட்டியில் கலந்து கொள்ளுதல்!
2 எதையும் செய்யுமுன் நன்றாக ஆலோசனை செய்து, தன் நம்பிக்கையுடன் செய்தல்,
2.கவனமாக சொல்வதைக் கேட்டுச் செய்தல்
3 தவறுகள் ஏற்படின் மறுபடியும் செய்தல்.
4.மற்றவர் உதவி இல்லாது தைர்யமாக தன் புத்தியை பயன்படுத்தி காரியங்கள் செய்தல் .
5 மற்றவர்களைவிட தன்னுடையதை மிகச்சிறப்பாக செய்து முடித்தல்.
6 ஆசானுக்கு கீழ்படிந்து நடத்தல்.
.மேலும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேண்டியது, முக்கியமாக மனோபலமும்,
மனப் பக்குவமும் என்று நாம் அறிவோம். இவ்வெல்லவற்ரையும் கடந்த ஐந்து
ஆண்டுகளாக, அச்சிறுவர்கள், இக்கோவிலில்ச் செய்த களிமண் பிள்ளயார் மூலமாக ,
அவர்கள் வாழ்க்கையில் முன்னேற , அவர் அளித்த அன்பளிப்பே !
உலகெங்கும் போற்றித் துதித்திடும் ஐங்கரனே! எப்பொழுதும் சுபத்தையே அளிக்கும்
ஐயனே !, எம் வாழ்க்கையில்,இடையூர்களை விலக்கி., அன்புடன் தர்ம பாதையில் முன்னேற,
ஆண்டாண்டுதோறும் வந்து, எமக்கு ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் !
தொகுத்தவர் - ஹரிஹர சுப்பையா