அரிசோனா ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் ஒரு தெய்வீக அனுபவம்!
ஆனந்தம்! பிரம்மானந்தம்! பரமானந்தம்!
அகஸ்ட்01, 2015 தேதி, அரிசோனா ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் நடந்த
"லிங்கைச்சனை" மறக்க முடியாத "ஒரு தெய்வீக அநுபவம்!" ஏன்?
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் திரு காசி விஸ்வநாத ஸ்வாமியே
நாத ரூபத்தில் சக்தியுடன் வந்து பக்த கோடிகளளை ஆசீர்வதித்த மாதிரி தோன்றியது!
மேலும், இக்கோவிலில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும், அந்த நிகழ்ச்சிக்கு ஏற்ற
நிபுணர்களைக் கொண்டே சிறப்பாக நடத்தி வைப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம்!
அது போலவே, "லிங்கார்ச்சனை"க்கும், அட்லாண்டா கோவில் "லிங்கார்ச்சனை"
நிபுணர் ஸ்ரீ சீனிவாச சர்மா அவர்களை அழைத்தும், அவரும் இவ்வளவு சிறப்பாக செய்து
முடித்ததும் எம் பாக்கியம் என்றும், நிர்வாகத் திறமையின் சிலாக்யம் என்றும்
சொல்லவும் வேண்டிமோ?
ரூபம், நாதம்,கந்தம். ருசி, ஸ்பரிசம் என்ற ஐந்து வகை அனுபவங்கள் ஒன்றுசேர்ந்து,
நம்மை "முக்தி" நிலைக்கு கொண்டு வந்த பெருமை "காசி நாதனையே " சாரும்!
"ரூபம்" - ஆனந்தம்! ஒரு கண்கொள்ளா காக்ஷி !
10 அடி பலகையில், பெரிய சிவலிங்க ரூபம் வரைந்து, அந்த கோட்டின் மீது, பக்தர்கள்
கையால் செய்த, ஆயிரத்துகுக்கு மேற்ப்பட்டசிறிய களிமன் லிங்கங்களை அழகாக அமர்த்தி ,
அதற்க்கு ஆகம முறைபடி, பல வித பூஜைகள். அர்ச்சனைகள், தீபாராதனைகள் செய்ததை
கண்டு களித்த பக்தர்கள்தான் எத்தனை! மிகவும் வியக்கத்தக்கது என்ன வென்றால்,
2 நிமிஷத்துக்கு ஒரு முறை தீபராதனையுடன் ஒரு நமஸ்காரம் நடந்ததை வயோதிகர்கள்கூட
செய்ததுதான் அவர்களின் பக்தியின் மகிமை ! ஈஸ்வரன் அவர்களுக்கு அருள் புரிவார்!,
"நாதம்" - " எங்கும் நிறை நாதப் ப்ரும்மம்" - ப்ரும்மானந்தம்!
"வேத ஆத்ம கண நபர்களும்", கோவில் "ஸ்ரீ ருத்ர" குழுவும் - மகளிர் உட்பட - ஒன்றாகச் கலந்து
எழுப்பிய "ஸ்ரீ ருத்ரம்", தாரக மந்திரமாகிய "ஓம் நம: சிவாய" என்றும், சிவா-சக்தி மந்திரமும் -
"வேத நாதம்"! - ஒரு தெய்வீக நாதம்!- நாதப் ப்ரும்மாக பரமேஸ்வரன் பார்வதியுடன் வந்து
ஆசீர்வதித்தனர் போலும்! அந்த "நாத நாதனுக்கும் - "சிவா-சக்தி"க்கும் எங்கள் பக்தியுடன்
சாஸ்டாங்க நமஸ்காரங்கள்!"
"கந்தம்" - மல்லிகை மற்றும் நறுமணப் பூக்கள் மணம்,சந்தணம், ஊதுவத்தி மணம், நுகர ஆனந்தம்!
"ருசி" - ப்ரஸாதமாக வழங்கிய "பஞ்சாம்ருதம்"- நிஜமாகவே "அமிர்தம் " - ஆனந்தம்!
"ஸ்பரிசம்" தான் பரமானந்தம்!
நிறைந்த மனதுடன், ஆனந்தமாக "அவன்" தரிசனமும் அருளும் பெற, வந்த பக்த கோடிகளுக்கு,
மலர்களுடன் சேர்த்து பூஜித்த சிவ லிங்கங்களை வழங்கிய பொழுது, அந்த லிங்கம கையில் பட்ட
உடனேயே ஒரு அலாதி உடல் சிலிர்க்கும் உணர்ச்சி! ஆஹா! அதுவே பரமானந்தம்!
ஐம் புலன்களும் ஒன்று சேர்ந்து அனுபவித்த இந்த அனுபவமே ஒரு தெய்வீக அனுபவம்!
குறை பக்தி உள்ள எனக்கும் நிறை பக்தி உண்டாகிய காசி விஸ்வேஸ்வரா!
உமா மகேஸ்வரா! உன் பாதம் பற்றினேன், பரமேச்வாரா ! உன் திருவடி சரணம்!
இயற்றியவர் - ஹரிஹர சுப்பையா