ஐந்தொழில் புரியும் அம்பிகை அன்னை பரா சக்தி தாயை வழிபட வேண்டும் என்று
நினைப்பதே பூர்வ ஜன்ம புண்யத்தின் பலன்தான்! இது உங்களுக்கு கிடைக்காத ஒரு
புதையல்! அந்த அதிஷ்ட நாட்கள்தான் ஜூலை 25,மற்றும் ஆகஸ்ட் 1, 2015 ,
மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தில் -.ஸஹஸ்ர (ஆயிரம்) லிங்கார்ச்சனை
வைபவம் ஜூலை 25,மற்றும் ஆகஸ்ட் 1, 2015 நடக்கயிருக்கிறது!
ஆகஸ்ட் 1, 2015 சிவ-சக்தி பூஜையாக லிங்கைச்சனையும், பராசக்தி அன்னை பார்வதியின்
சக்தி பூஜையும் நடக்கயிருக்கிறது!
ஐயா, "லிங்கார்சனை"பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்கள் !
ஐயா, இந்த ஆயிரம்மேற்ப் பட்ட லிங்கங்கள் கடையில் வாங்கினவை அல்ல!
அவகள் பக்தர்கள் கையால் செய்யப் பட்டவை!
ஜூலை 25ம் தேதி, பூமி பூஜை செய்து, மந்திர பூர்வமாக சுத்தம் செய்த மண்னைக் கொண்டு ,
பக்தர்கள் கையால் செய்த லிங்கத்திர்க்கு பூஜை செய்யப் போகிறிர்கள்!
சிவ பெருமானின் உருவமே சிவ லிங்கம்! "ஓம்" எனும் ப்ரணவ மந்திரத்தின்
"நாத ஸ்வரூபமே" அவர்தான்!.
ஆகஸ்ட் 1ம் தேகி எம்பெருமான் சிவபெருமனை, "ஆத்ம வேத கான " வேத பண்டிதர்கள்
ஓதும் ஸ்ரீ ருத்ரம் முழக்கத்தின் ஒலியில், நீங்கள் "ஓம் நம: சிவாய " என்று சொல்லி ,
அர்ச்சனை செய்யப் போகிறீர்கள்! "ஓங்கார ஸ்வரூபமாக எங்கும் வியாபித்திருக்கும்
பரம சிவனே, ஓங்கார மூர்த்தியே, உமக்கு நமஸ்காரம்" என்றும் !"ஓம் ஸ்ரீ உமா பார்வதீஸ்வர
சுவாமின்னே நமஹ" என்றும் அர்ச்சனை செய்யப் போகிறீர்கள்!
மேலும் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், அவர் உடலில் இடபாகமாக
இருந்து வரும் "சக்தி: தான் பார்வதி! அவளின் மற்றொரு பெயர்தான் "உமா ". அதனால்,
இது "உமா பார்வதீச்வர - "சிவ-சக்தி" பூஜை ஆகும் !
ஸ்காந்தத்தில் வரும் ஸ்லோகம்படி
"ஏஷா ஸா ஸாக்ஷிணீ ஷக்திஹி சங்கர ஸ்யாபி ஷங்கரீ .... "
ஸாக்ஷியான இந்த சக்தி, சங்கரனுக்கும் மங்களத்தை செய்பவள்" என்று அர்த்தம்.
சக்தியில் சிவன் அடக்கம். ஆகையால் இந்த சிவ-சக்தி பூஜையால் .
இவ்விருவரையும் பூஜை செய்த பலன் உண்டாகும்! இகபர சுகங்களும், அவன் அருளும்
கிட்டும். சகல சௌபாக்கியங்களும் பொங்கும்! இந்த அரிய சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள்!
குடும்ப சமேதரார் வந்து அருள் பெருங்கள்!.
இயற்றியவர் ஹரிஹர சுப்பையா