Devi-An ode to the Supreme Goddess

" தேவீ  "- டான்ஸ்  - ட்ராமா !

 "யா தேவீ ஸர்வ பூதேஷூ ஷக்தி ரூபின் சன்ஸ்திதா 

நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: " 

 

அரிசோனா பக்த கோடிகளேநீங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள்!

 கே : "ஏன்?

 ஸ்ரீ மஹா கண்பதிக்கு நடந்த 10 நாட்கள் உத்ஸவத்தில் அவர் அருளை வீசிச்  சென்றார் !

இப்பொழுது,தேவீ  "என்ற லைப்பில்  நடக்கவிருக்கும்,"டான்ஸ் - ட்ராமாமூலம்

தேவியின் அனுக்ரஹ  மழை  பொழிய காத்திருக்கிறது!  இது பெரிய அதிஷ்டமல்லாது

வேறு  என்ன

 

அக்டோபர் 31, 2015,  பகல் 2 மணிக்கு,அரிசோனா "வர்ஜினியா பைப்பர் அரங்கத்தில்",

தேவீ  "என்ற தலைப்பில்  நடக்கவிருக்கும்,"டான்ஸ் - ட்ராமாவை "  காணத்  தவறாதீர்கள் !  

                                                                                   

"தேவி பாகவதம்மற்றும், " தேவீ  மகாத்மியம்என்பதலிருந்து எடுத்த பராசக்தியின்

பராக்கிரம  கதைகளை கண்டும்கேட்டும்  களித்தும்தும் அம்பிகையின் அருளைப்

பெற வேண்டாமோ ?

அம்பகையின்  வீரம்தீரம்கருணைகோபம்தயை அன்பு  இவைகளை காண வேண்டாமோ ! 

இந்த " நாட்டிய  நவ ரஸங்களை "சித்திரித்து காட்டும்,  75 மாணவிகள் தங்கள் தங்கள் குருவிடம் நேர்மையாக  கற்ற   நாட்டிய சிறப்பையும்திறமைகளையும், தெய்வ பக்தியையும்

காண வேண்டாமோ ! 

இவர்கள் திறமை " குருவின்பெரும் அருளே  என்று சொல்லவும் வேண்டுமோ ! 

 

அன்பர்களே !நீங்கள் அனுபவிக்கப் போகும் சங்கீதத்தின்  இனிமையிலும்நாட்டியத்தின் 

மேன்மையிலும்தேவியின் மீதுள்ள பக்திப்  பெருக்கிலும்  தன்னையே மறந்த

இன்பத்தின்  அனுபவத்தை சொல்ல முடியுமா?.  

 

கே : ஐயாசற்று விபரமாக பங்கு கொள்ளும் நாட்டியப் பள்ளிகளைப் பற்றி கூற இயலுமா 

சந்தோஷமாகஇவ்விரண்டு நாட்டியப் பள்ளிகளின் குரு முகமாகக் கிடைத்ததை உம்முடன் பகிர்த்துக் கொள்கிறென்